மானிடரே! போற்றுங்களே!
மாநிலத்தில் பறைசாற்றுங்களே!
மேலானவர் இயேசு மேலானவர்
ஆகாயம் புமிக்கும் மேலானவர் – 2
1.
இருளில் ஒளியும் இயேசு – நம்
இதய விளக்கும் இயேசு
மருள்வோர் வழியும் இயேசு – அவர்
மனதின் உறுதி இயேசு
அருளின் சுனையும் இயேசு – உயர்
அன்பின் பொருளும் இயேசு – மானிடரே!
2.
உலகம் அவரால் வாழும் – அதில்
உயிர்கள் புனிதம் ஆகும்
பலரின் வாழ்வு மாறும் – பாவப்
பழிகள் யாவும் தரும்
நிலவும் மகிழ்ச்சி நாளும் – இனி
நிறையக் குடும்பம் தோறும் – மானிடரே!
3.
அலைகள் வாழ்வில் மோதும் – பலர்
அழிவைக் காண நேரும்
மலைகள் பெயர்ந்து போகும் – பலர்
மனங்கள் பயந்து சாகும்
நிலையாய்க் கரங்கள் கோர்ப்பார் – நம்மை
நிஜமாய்க் கரையில் சேர்ப்பார்- மானிடரே!
manitare! beாrrungkale!
ma nilaththil paraisarrungkale!
melanavar iyesu melanavar
aakayam bumikkum melanavar – 2
1.
irulil oliyum iyesu – nam
idhaya vilakkum iyesu
marulveாr vaziyum iyesu – avar
manathin uruthi iyesu
arulin sunaiyum iyesu – uyar
anbin beாrulum iyesu – manitare!
2.
ulakam avaral vazum – athil
uyirkal bunidham aakum
palarin vazvu marum – bavab
pazikal yavum dharum
nilavum makizssi nalum – ini
niraiyak kudumpam theாrum – manitare!
3.
alaikal vazvil meாthum – palar
azivaik kana nerum
malaikal beyarnththu beாkum – palar
manangkal payanththu sakum
nilaiyayk karangkal keாrbbar – nammai
nijamayk karaiyil serbbar- manitare!